'சர்தார் 2' படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல்

Sinoj

வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (19:29 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் 'சர்தார் 2'  படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில்  வெளியான படம் சர்தார். இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா, லைகா உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர்.

இப்படத்தை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். 

இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட்டானது.

எனவே இதன் 2 ஆம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்தது. அதன்படி, இன்று (பிப்ரவரி 2 ஆம் தேதி ) சர்தார் 2  படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகிறது.

கார்த்தி நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால் மற்ற மொழி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்