கோட் படத்தில் வில்லன் விஜய்தானா?.. தீயாய் பரவும் தகவல்!

vinoth

வெள்ளி, 15 மார்ச் 2024 (07:42 IST)
விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்து விட்ட நிலையில் அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் நடிகர் மோகன் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இந்த படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் விஜய்யே நடிப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் என்றும் அதில் ஒரு விஜய் கதாபாத்திரம்தான் வில்லன் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. விஜய் கடைசியாக பிரியமுடன் படத்தில் நெகட்டிவ் தன்மையுடைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்