தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்துவிட்டு ஓடிடிக்கு பணம் கட்டிய ரசிகர்: பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:08 IST)
தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்துவிட்டு ஓடிடிக்கு பணம் கட்டிய ரசிகர்:
சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை பெரும்பாலானோரும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்டா பைரஸி சேனலில் பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அதே நேரத்தில் இது குறித்த வதந்திகளும் பொய்யான கற்பனைகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.  க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை பைரஸியில் பார்த்த ஒரு ரசிகர் அந்த படத்தை பார்த்து ஆச்சரியமடைந்து இப்படி ஒரு நல்ல படத்தை பைரஸியில் பார்த்து விட்டோமே என்ற வருத்தம் அடைந்து அதன் பின்னர் அவர் ஓடிடிக்கு ரூ.199 செலுத்தியதாக பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் சிலர் செய்திகளை கற்பனையாக கசிய விட்டு வருகின்றனர் 
 
தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்துவிட்டு ஓடிடிக்கு பணம் செலுத்தும் கற்பனை கதை தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா என்று ரசிகர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் ஓடிடியில் படம் ரிலீஸ் செய்வதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பது பொய்யான தகவல் என்றும் அவர்களுக்கு படத் தயாரிப்புச் செலவு கிடைத்துவிடும் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் தயாரிப்புச் செலவு கண்டிப்பாக கிடைத்து விடும் என்பதே உண்மை என்றும் கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்