ஆங்கிலப் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா...

வியாழன், 18 பிப்ரவரி 2021 (22:28 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில்   கோடம்பாக்கத்தில் தனது புதிய ஸ்டுடியோவை திறந்துள்ளார்.

அவரது ஸ்டுடியோவிற்குச் சென்ற  நடிகர் ரஜினிகாந்த், ஒரு கோயிலுக்குச் சென்ற உணர்வு ஏற்படுவதாக இந்த ஸ்டுடியோவை பற்றிக் கூறினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இங்கு இசையமைத்துவருகிறார்.

இவர் ஏற்கனவே, ஆங்கிலப்படமான லவ் அண்ட் லவ் ஒன்லி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் தற்போது ஏ பியுட்டிஃபுல் பிரேக் அப் என்ற ஆங்கிலப் படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஜித்வாசன் இப்படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்