இளையராஜாவின் பயோபிக் திரைப்படம்.. தனுஷ் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..

Siva

புதன், 20 மார்ச் 2024 (13:37 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ள நிலையில் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். 
 
இந்த போஸ்டரில் இசைஞானி இளையராஜா திரை வாய்ப்பு தேடி சென்னைக்கு ஹார்மோனிய பெட்டியுடன் வந்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கும் நிலையில் மற்ற கேரக்டரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு நீரவ்ஷா சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’இளையராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

Honoured @ilaiyaraaja sir

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்