''நான் சொன்னேன்ல, விஜய் CM ஆயிடுவாருன்னு'' - வலைப்பேச்சு அந்தனன்

செவ்வாய், 25 ஜூலை 2023 (21:13 IST)
‘’பிரபல சினிமா விமர்சகர் வலைபேச்சு  அந்தனன்,  நான் சொன்னேன்ல விஜய் சி.எம். ஆயிடுவாருன்னு’’ என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

கடந்த ஜூன் 17 ஆம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச பயிலகம் திட்டத்தை தொடங்கினார்.

சமீபத்தில், சென்னை, கொங்கு மண்டலம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி  ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. விஜய்யால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என 76.53 சதவீதம் பேரும், இதற்கு எதிராக 23.47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தேர்தலில் களமிறங்குவதற்கு அனுமதி அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவர்  விஜய்யைப் பற்றி  ‘’ திருவள்ளுவர் ஒரு எழுத்தாளர் அவளோ தான் ஆனால், தளபதி  பாடகர் நடிகர்  ஆடுபவர் நல்ல மனிதன் புரியூதா’’ என்று பதிவிட்டிருந்ததைக் குறிப்பிட்டு, ‘’பிரபல சினிமா விமர்சகர்  அந்தனன்,  நான் சொன்னேன்ல விஜய் சி.எம். ஆயிடுவாருன்னு’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

நான் சொன்னேன்ல, விஜய் CM ஆயிடுவாருன்னு pic.twitter.com/F5hK53H19x

— ValaiPechu Anthanan (@Anthanan_Offl) July 25, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்