மகிழ் திருமேனிக்கு அஜித் போட்ட அன்புக் கட்டளை… விடாமுயற்சி தாமதத்துக்கு இதுதான் காரணமா?

சனி, 17 ஜூன் 2023 (07:34 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை செய்த  ரெய்ட் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகளால்தான் இந்த படம் தொடங்குவது தாமதமாகி வருகிறது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தாமதத்துக்கு வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த போது ஒரு பட்ஜெட் போடப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. அதனால் இப்போது அதே பட்ஜெட்டில் படத்தை உருவாக்க வேண்டும் என இயக்குனருக்கு அஜித் அன்புக்கட்டளை இட்டுள்ளாராம். அதனால்தான் இப்போது தாமதம ஆகி வருகிறது என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்