வேற வழியில்ல… மஹா ரிலீஸ் முடிவை எடுத்த படக்குழு!

சனி, 8 மே 2021 (15:19 IST)
ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் நின்றது.

அதையடுத்து இப்போது முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ரிலிஸுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா இரண்டாம் அலைக் காரணமாக மீண்டும் திரையரங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் படக்குழு. அதற்காக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்