ஜெயலலிதா பயோபிக்: ரம்யா கிருஷ்ணனுக்கு ஜாக்பாட்..

வெள்ளி, 21 டிசம்பர் 2018 (16:49 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவில் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் வெப் சீரிஸாக உருவாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறாராம் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோமன் பாபுவாக வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 
சுமார் 30 வாரங்கள் இந்த வெப் சீரியஸ் ஆக ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. மேலும், குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்