கூடிய விரைவில் முழு நேர நகைச்சுவை நடிகராக வருவேன் - நடிகர் பிளாக் பாண்டி பேட்டி

திங்கள், 30 அக்டோபர் 2023 (21:08 IST)
கோவை சின்னவேடம்பட்டியில் ஞான சஞ்சீவனா சங்கமம் 2023 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிளாக் பாண்டி செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், எனக்கு நிறைய பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்கும் பொழுதும்,வாழ்வியல் முறையில் ஆறுதல் சொல்வதற்கு ஆள் இல்லாத போது சரியான ஆள் கட்டியாக ஞான சஞ்சீவனா குருகுலத்தின் நிறுவனர் சசிகுமார் ஆறுதலாக இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாராகியின் யாகத்தை எல்லாருடைய நலனுக்காக நடத்தியுள்ளார். மக்கள் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள நிறைய தளத்தை தேடுவார்கள்,இங்கு வந்த  உடனே மனது சரியாகிவிடும். இங்கு குறைவு எதுவுமே கிடையாது,நிறைவு மட்டும் தான்.அவரவர் எண்ணத்தின் வழியில் எண்ணங்களை சரியாக வைத்துக் கொண்டால் எந்த சிகரத்தையும் அடைய முடியும் என்பதற்கு ஞான சஞ்சீவன வழிகாட்டியாக இருக்கிறது.

நிறைய குழந்தைகள் படிக்க முடியாமல் தற்கொலை முயற்சி எடுக்கிறார்கள். சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் இறந்து போனார். இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் ஞான சஞ்சீவனத்தை பாருங்கள் நிச்சயமாக மாற்ற வரும்.என்னுடைய வாழ்க்கையும் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இப்போ நான்கு திரைபடத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். 40 படம் வெளியாகவதற்கு  வெயிட்டிங்கில் உள்ளது.பூங்கா நகரம், அடங்காதே,சைரன்,உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். அதில் எல்லாமே பக்கத்து வீட்டு பையன்,எதிர் வீட்டு பையன், நண்பன் போன்ற வேடங்களில் நடித்துள்ளேன்.கூடிய விரைவில் எல்லாருமே எதிர்பார்க்கின்ற மாதிரி  முழு நேர நகைச்சுவை நடிகராக வருவேன்.

சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்தனும், இப்போது, (யோகி பாபு,சூரி) அவர்களுக்கு கிடைத்துள்ளது பயன்படுத்துகிறார்கள். சினிமாவில் முக்கிய காரணம் வாய்ப்பு கிடைக்கும் போது அதனுடைய உழைப்பை கொடுக்க முடியும்.

நிச்சயமா கிடைக்கும் என நம்புறோம்.மம்முட்டி, ஜிவி பிரகாஷ் ஸ்ரீகாந்த்,இவர்களுடன் ஒவ்வொரு படம் நடித்துள்ளேன்.இன்னும் விஜய்,அஜித் அவர்களுடன் நடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம் அது கிடைக்கும்போது கிடைக்கும்.ஏற்கனவே விஜய் கூட மூன்று படம் நடித்துள்ளேன்.

அடுத்த படம் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டு  முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.லியோ படம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என்று கூறினார்.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்