தீபிகா படுகோனேவை தொடர்ந்து மணிகார்னியாக்கு கிளம்பிய எதிர்ப்புகள்

வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (13:09 IST)
‘பத்மாவத்’ திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனேவை தொடர்ந்து, ஜான்சி ராணி வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ’மணிகார்னியா’ படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
தற்போது திரைத்துறையில் அவ்வப்போது வரலாற்று பின்னணியை மையாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த வருடம் அனைத்து மொழிகளிலும் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் இந்திய சினிமாவையும் உலகளவில் பேசப்பட்டது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம், சஞ்சய் லீலா  பன்சாலி இயக்கத்தில் வெளியான ’பத்மாவத்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
 
தற்போது பாலிவுட் நடிகை, கங்கனா ரணவத் நடிப்பில் ’மணிகார்னியா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாயின்  வரலாற்றை சொல்லும் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. ஆனால். படம் வெளியாவதற்குள், சர்வ பிரமாண சபை, ராஜ்புத் இனத்தவர்கள் போன்ற இந்து அமைப்பினர் படத்திற்கு போர்க் கொடி தூக்கியுள்ளனர். இந்த படத்தில், ஜான்சி ராணி வெள்ளைக்காரை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக  அவர்கள் கூறியுள்ளனர்.
 
இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது போராட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி  படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பேசியுள்ள படத்தின் இயக்குனர், கிரீஷ் ”படத்தில் ஜான்சி ராணியின்  கதாபாத்திரம் எந்த வகையிலும் தவறாக சித்தரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்