பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் துல்கர் சல்மான்..

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (11:32 IST)
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், பாலிவுட்டில் அறிமுகமாகிறார்


 

 
மலையாளத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘ஓ காதல் கண்மணி’ படம், அவருக்கு நிறைய தமிழ் ரசிகர்களை உருவாக்கித் தந்துள்ளது. இந்நிலையில், பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
 
ஆகாஷ் குர்ரானா இயக்கும் இந்தப் படத்தில், பெங்களூர் பையனாக நடிக்கிறார் துல்கர். அவருடன் இர்ஃபான் கான், மிதிலா பார்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். ரோனி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் நடித்துள்ள ‘சோலோ’ விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்