சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் அடுத்த அப்டேட் இதோ!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:33 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் தற்போது அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ‘டாக்டர்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகும் என்றும் ’சோ பேபி’ என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்திருக்கிறார் என்றும் சிவகார்த்திகேயன் பாடலை எழுதியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் நெல்சன், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் உரையாடும் 3 நிமிட வீடியோ காட்சிகள் காமெடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்