ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்காவுக்குச் சென்ற தனுஷ்… வைரலான புகைப்படம்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:18 IST)
நடிகர் தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். முதல் கட்டமாக தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக கட்டவுள்ள இல்லத்துக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டார். அதன் பின்னர் இன்று அவர் க்ரே மேன் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்குக் கிளம்பி சென்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்