பார்த்திபன் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கும் டி இமான்!

செவ்வாய், 24 அக்டோபர் 2023 (11:11 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். இந்த படத்துக்கு “Teen” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் பார்த்திபனே தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறும் என டி இமான் தெரிவித்து பார்த்திபனுடன் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்