நியாயமா த்ரிஷாதானே உங்க மேல வழக்கு தொடரணும்.. மன்சூர் அலிகானைக் கண்டித்த உயர் நீதிமன்றம்!

திங்கள், 11 டிசம்பர் 2023 (14:49 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான கலைஞர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தும், அவர் தன் பேச்சில் தவறு இல்லை என பிடிவாதமாக இருந்து வருகிறார். இதற்கிடையில் திரிஷாவிட மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். பின்னர் அந்த அறிக்கையிலும் தான் மன்னிப்புக் கேட்கவில்லை என கூறினார்.

இந்நிலையில் இப்போது தன் மீது அவதூறு பரப்பியதாக திரிஷா, சிரஞ்சீவி மற்றும் குஷ்பு ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் தலா ஒரு கோடியை தரவேண்டும் என அவர் இந்த மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் “இந்த விவகாரத்தில் திரிஷாதானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எங்களுக்கு இந்த விவகாரம் பற்றி எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா? நடிகராக பொதுவெளியில் இருக்கும் ஒருவர் ஏன் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்? எதற்காக அவர் அவர் ஊடகங்களை சந்திக்கிறார்? அவருக்கு  வேறு பணிகள் இல்லையா? எந்த தவறும் செய்யவில்லை எனும் சொல்லும் மன்சூர் அலிகான் ஏன் மன்னிப்புக் கேட்டார்? கைதில் இருந்து தப்பிக்கவா?” எனக் கேட்டுள்ளார்.

மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இது சம்மந்தமாக பதிலளிக்க சொல்லி த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்