விஜய் பட இயக்குநர் யோகிபாபு படத்திற்கு வாழ்த்து

வெள்ளி, 12 மார்ச் 2021 (22:13 IST)
நடிகர் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள  மண்டேலா படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் மண்டேலா. இப்படத்தை மடோன்னே அஷ்வின் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படத்தை சசிகாந்த் மற்றும் சக்கரவர்த்தி ராமச்சந்திரா என்பவர் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை ரிலீசாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவிற்குப் பராட்டுத் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் சினிமாவிற்கு வந்த தொடக்க காலம் முதல்  மடோனா அஷ்வின் அறிமுகம் ஆகவேண்டும் எனக் காத்திருந்தேன். தற்போது அது நடந்துள்ளது. உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். மண்டேலா படக்குழுவிற்கு ஆல் தி பெஸ்ட் எனத் தெரிவித்துள்ளார்.

Ever since I stepped into film making .....waiting for this person's debut @madonneashwin Happy n proud of you da ❤️All the very best to the entire team

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்