நடிகர் அதர்வா பிறந்தநாள் குவியும் வாழ்த்துகள்

வெள்ளி, 7 மே 2021 (23:55 IST)
தமிழ் சினிமாவில் 90, 90 களில் முன்னணி நடிகராக வலம்வந்தவர் முரளி. இவரது மூத்த மகன் அதர்வா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

இப்படத்திற்குப் பின், முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை, சண்டி வீரன், ஈட்டி,  கணிதன்,  இமைக்கா நொடிகள், பூமராங், 100 உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இவரது நடிப்பில், குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இவர் இன்று தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்