ராம்லீலாவைப் பற்றி அவதூறாகப் பேசினாரா பிரகாஷ்ராஜ் – போலிஸில் புகார் !

சனி, 26 அக்டோபர் 2019 (08:35 IST)
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் ராம்லீலா குறித்து தவறாகப் பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தில்லி போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாதத்தில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், ராம்லீலா நிகழ்ச்சி சிறுபான்மையினரை அச்சுறுத்துவதாகவும் ஆபாசமாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அவருக்கு எதிரானக் கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து இதற்கு தனது டிவிட்டரில் பதிலளித்த அவர் ‘நான் எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல; மதத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்குதான் எதிரானவன்.  இன்னும் எத்தனை நாளைக்கு என்னை ஆண்ட்டி- இந்து என்ற போலிச் செய்தியை நீங்கள் பரப்புவீர்கள். மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் கலாச்சாரத்தையும் எவ்வளவு காலம்தான் தவறாக பயன்படுத்துவீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அவர்மேல் மத உணர்வுகளைத் தவறாகப் பேசியதாக  தில்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்