ஆதிபுருஷ் படம் பற்றி சர்ச்சைக் கருத்து … நடிகர் சைஃப் அலிகான் மீது வழக்கு!

புதன், 16 டிசம்பர் 2020 (16:29 IST)
ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடிக்கும் சைப் அலிகான் தெரிவித்த கருத்துக்காக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அனுஷ்கா சர்மா இப்போது கர்ப்பமாக உள்ளதால் பிரசவம் முடிந்து ஓய்வுக்கு பின்னர் இதில் அவர் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சைப் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் ராவணனின் நல்ல பக்கத்தையும் இந்த படம் காட்டும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து ராவணனை எப்படி நல்லவனாக காட்டுவதாக கூறலாம் என பாஜக தலைவர்கள் பலரும் சாயிப் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் இப்போது அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக அவர் பேசியுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்