4 தேசிய விருதுகள் வென்ற சினிமா பிரபலம் தற்கொலை…ரசிகர்கள் அதிர்ச்சி

புதன், 2 ஆகஸ்ட் 2023 (16:57 IST)
பாலிவுட் சினிமாவின் பிரபல கலை இயக்குனர் நிதின் தேசாய் இன்று தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட்  சினிமாவின் முன்னணி கலை இயக்குனராகப் பணியாற்றி வந்தவர் நிதின் தேசாய். இவர், தேவதாஸ், ஜோதா அக்பர், லகான் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களுக்கு அரங்குகள் வடிவமைத்து பிரபலமானார்.

இதுவரை சினிமாவில் கலை இயக்குனராக சிறப்பாக பணியாற்றிதற்காக இவர் 4 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மும்பை கர்ஜத் பகுதியில் உள்ள தன் ஸ்டுடியோவில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகிறது.

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிதின் தேசாய் தன் 58வது பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில், இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது தற்கொலைக்கு நிதி நெருக்கடிதான் காரணம் என தகவல்கள் வெளியாகிறது. இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்