பாஜகவிற்கு எதிராக களமிறங்குறாரா புளுசட்டை மாறன்? கோலிவுட்டில் பரபரப்பு

வியாழன், 5 டிசம்பர் 2019 (09:07 IST)
கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா என மாஸ் நடிகர்கள் அனைவரின் திரைப்படங்களையும் கழுவிக் கழுவி ஊத்தும் விமர்சகராக இருந்து வருபவர் புளு சட்டை மாறன். இவரது விமர்சனம் என்றாலே திரையுலகினர் அஞ்சி நடுங்கும் அளவுக்கு அவரது விமர்சனங்கள் இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் மற்றவர்களை எடுக்கும் படத்தை குறை சொல்லும் புளு சட்டை மாறன் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படம் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு அவர் ’ஆன்ட்டி இந்தியன்’ என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் அடிக்கடி ’ஆன்ட்டி இந்தியன்’என்ற வார்த்தையை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த டைட்டிலை வைத்து அவர் பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ளாரா? என்று சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்