சுஷித்ராக்கு பதில் நம்ம ஜெயிலுக்குள் இருந்திருக்கலாம்...!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:46 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கடைசி இடத்தை பிடித்த டீம் " பாலா , ரம்யா பாண்டியன் , சுச்சி" டீம் தான். இதில் சரியாக விளையாடாத இரண்டு பேரை தேர்வு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள் பாலா மற்றும் சுச்சியை தேர்வு செய்து ரம்யா பாண்டியன் கொஞ்சம் சிறப்பாக விளையாடியதாக கூறினார்கள்.

அதையடுத்து பாலா மற்றும் சச்சி இருவரும் ஓய்வறைக்குள் அடைக்கப்பட்டனர். பின்னர் பாலா கொஞ்சம் கடுப்பாகி தன்னை கண்ணாடி கூண்டிற்குள் காரணத்தை கூறி அடைத்த போட்டியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை சுச்சியிடம் கூற அதற்கு சுசித்ரா எடக்கு முடக்காக பதில் அளித்ததால் கடுப்பாகி, யப்பா... உங்ககூட உள்ள தள்ளி என்னை சாவடிக்குறாங்கப்பா என புலம்பினார்.

இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பாலா இல்லாமல் தனியாக கஷ்டப்படும் ஷிவானியை ரம்யா பாண்டியன் , சம்யுக்தா உள்ளிட்டோர் செமையா கலாய்த்து கிண்டல் அடிக்கின்றனர். பாலா பெயரை பலூனில் எழுதி ஹார்டின் போட்டு பறக்கவிடுவது, அவ்வப்போது கண்ணாடி கூண்டின் அருகில் நின்றுக்கொன்று வருத்தப்படுவதுமாக இருக்கிறார் ஷிவானி. தற்ப்போது ஷிவானி பாலா மைண்ட் வாய்ஸ்: இந்த சுஷித்ராக்கு பதில் நம்ம இரண்டு பேரும் ஜெயிலுக்குள் இருந்திருக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்