மாஸ் குறையாத பாட்ஷா பாய்! – ஹவுஸ் ஃபுல் ஆன காட்சிகள்!

வியாழன், 12 டிசம்பர் 2019 (18:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட “பாட்ஷா” திரைப்படம் ஹவுஸ்ஃபுல்லாகி சாதனை படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பிறந்தநாளுக்கு அவரது புதிய திரைப்படம் வெளியாகாவிட்டாலும், அவரது ஸ்டார் ரேட்டிங் படமான ‘பாட்ஷா’வை ரிலீஸ் செய்துள்ளார்கள்.

பாம்பே மாஃபியாவை பின்புலமாக கொண்ட இந்த படம் ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான ஒன்று. ஆட்டோக்கார மாணிக்கமாகவும், பாம்பே டான் பாட்ஷாவாகவும் நடிப்பில் அட்டகாசம் செய்திருப்பார் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் ரஜினி பிறந்தநாளுக்காக திரையிடப்படுவதாக அறிவிப்பு வெளியானதுமே முன்பதிவுகள் வேகமாக நடக்க தொடங்கியது. இன்று படம் திரையிடப்பட்ட பெரும்பான்மை தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக படம் போய்க் கொண்டிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் பலமுறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் கூட புதிய படத்தை பார்ப்பது போல உற்சாகத்துடன் விசிலடித்து, ஆராவாரம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

பாட்ஷா returns in @RamCinemas. சினிமாவில் மட்டும் அல்ல, தலைவா @rajinikanth @rmmoffice @TirunelveliRmm pic.twitter.com/JxjItAn99p

— Nellaigomathishankar (@nellaishankar) December 11, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்