நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படத்தயாரிப்பில் இறங்கும் ஏவி எம் நிறுவனம்! இன்ப அதிர்ச்சி!

செவ்வாய், 28 ஜூலை 2020 (17:32 IST)
தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றான ஏவிஎம் புரோடக்‌ஷனின் நிறுவனர் மெய்யப்பனின் நினைவு நாளான இன்று அந்நிறுவனம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளைக் கடந்த சினிமா தயாரிப்பு நிறுவனமாக ஏவிஎம் திகழ்கிறது. அவர்களது சக போட்டி நிறுவனங்களான ஜெமினி, விஜயா, வாஹினி போன்ற நிறுவனங்கள் எப்போதோ இழுத்து மூடப்பட்ட பிறகும் இன்றும் ஏவிஎம் இயங்கி வருகிறது. ஆனால் படங்களை தயாரிக்காமல் அரங்கு வாடகை, ரெக்கார்டிங் ஸ்டுடியோ போன்ற பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கப் போவதாக ஏவிஎம் சரவணன் அறிவித்துள்ளார். கடைசியாக சிவாஜி உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்