அட்லியின் அடுத்த பட ஹீரோ குறித்த தகவல்

புதன், 11 டிசம்பர் 2019 (06:33 IST)
இயக்குனர் அட்லி இயக்கிய ’ராஜாராணி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து விஜய்யின் மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கினார் 
 
அவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களும் நல்ல வசூலைக் கொடுத்த போதிலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்றும் அதிக பட்ஜெட்டில் அவர் படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது
 
இந்த நிலையில் அட்லியை வைத்து வேறு எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க கூடாது என்று மறைமுக ரெக்கார்டு போடப்பட்டதாக ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வருகிறது 
 
இதனால் விஜய் நடித்த மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கியும் அவருக்கு அடுத்த படம் இன்னும் புக் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக கூறப்பட்டாலும் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் அட்லி ஒரு அதிரடியான முடிவை எடுத்திருப்பதாகவும் ஒரு படத்தை அவரே இயக்கி, அவரே தயாரித்து அவரே நடிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது 
 
அட்லி தனது அடுத்த படத்தில் ஹீரோவாக தயாராகி வருவதாகவும் அதற்காக சில பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
அட்லியே தயாரித்து, நடித்து, இயக்கவிருக்கும் திரைப்படம் பெரிய பட்ஜெட் படமாக இருக்குமா அல்லது அவரது குருநாதர் தயாரித்தது போல் சின்னபட்ஜெட் படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்