அசோக் செல்வன் நடிக்கும் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth

சனி, 16 மார்ச் 2024 (07:15 IST)
சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக அறிமுகமான அசோக் செல்வன், அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் பல வெற்றி படங்களைக் கொடுத்து இப்போது தனக்கான ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரின் போர்த் தொழில் மற்றும் ப்ளு ஸ்டார் ஆகிய படங்கள் வெற்றிப் படமாக அமைந்தன.

இந்நிலையில் இப்போது அவர் புதுமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் கதாநாயகியாக அவந்திகா நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். திருமலை இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். வித்தியாசமான டைட்டிலோடு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்