கோபம் வரணும்… அப்பதான் தப்பு பண்றவனுக்கு பயம் வரும் – அருன் விஜய்யின் சினம் டீசர்!

திங்கள், 11 ஜனவரி 2021 (12:21 IST)
அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார். அதில் ஒரு படமாக ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடித்து வரும் சினம் திரைப்படம் உள்ளது.

இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் அருண் விஜய்யின் தந்தை விஜய்குமாரே தயாரித்துள்ளார். இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் சென்சாருக்கு அனுப்பப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸாக உள்ள நிலையில் அதற்குள் படக்குழு திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசர் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்