பிரபல நடிகை ஜெயபிரதாவுக்கு கைது வாரண்ட்

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (20:48 IST)
பாஜக மூத்த நிர்வாகியும் பாலிவுட் நடிகையுமான ஜெயபிரதா மீது எம்.பி -எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
பாஜக மூத்த நிர்வாகியும் பாலிவுட் நடிகையுமான ஜெயபிரதா கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அந்த தேர்தலில், பிப்லியா மிஸ்ரா என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக எழுந்த புகாரின் அடிப்படையிலும்,  அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி  இரண்டு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டன.

இந்த இரண்டு வழக்குகளிலும் விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர் மீது எம்.பி -எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் அவர் மீது ஜாமீனின் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

மேலும், வரும்  ஜனவரி 10 ஆம் தேதிக்குள் அவர் நீதிபதி முன் ஆஜராக வேண்டும் எனவும், அவரை பிடிப்பதற்கு இன்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்