83 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ!

வியாழன், 1 ஜூன் 2023 (08:15 IST)
ஹாலிவுட்டின் பிரபல நடிகரான அல் பசீனோ, அவருடைய காட்பாதர், ஸ்கார் பேஸ் மற்றும் செண்ட் அஃப் அ வுமன் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்காக  உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். அவர் இப்போது ஹாலிவுட் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது 83 வயதாகும் அல் பசீனோ, தன்னுடைய நான்காவது குழந்தைக்கு தந்தை ஆக உள்ளார். அவரின் காதலியான நூர் அல்ஃபல்லா இப்போது 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் கரோனா தொற்றுக்காலத்தில் சந்தித்து மனம் ஒத்து சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அல் பசீனோவுக்கு ஏற்கனவே இரண்டு ஆண்குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் மற்றொரு ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டி நீரோ 79 வயதில் தன்னுடைய 7 ஆவது குழந்தைக்கு தந்தை ஆனார் என்பது குறிப்புடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்