தலைவா படத்தை உருவாக்கியது விஜய்க்காக இல்லை– ரகசியம் பகிர்ந்த இயக்குனர் விஜய்!

வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:16 IST)
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய தலைவா படத்தில் அஜித்தைதான் நடிக்க வைப்பதாக எண்ணி இருந்தாராம்.

இயக்குனர் ஏ எல் விஜய் அஜித் நடித்த கிரீடம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய மதராசப் பட்டணம் மற்றும் தெய்வ திருமகள் ஆகிய படங்கள் மட்டுமே கவனத்தை ஈர்த்தன. ஆனாலும் தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தன் படத்தில் பணியாற்ற வைத்து வருகிறார்.

இவர் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான தலைவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி தோல்வி அடைந்தது. அது மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது அந்த படம் பற்றி பேசியுள்ள ஏ எல் விஜய் அந்த படத்தை அஜித்துக்காகதான் உருவாக்கினேன் என்ற ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்