ஊரடங்கில் ஒன்றுகூடி கேரம் விளையாடும் அஜித் , விஜய், ரஜினி - கமல் எடுத்த புகைப்படம் இதோ!

செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (14:59 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு மிக தீவிரமாக அமல் படுத்தப்பட்டு முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகிற மே 3ம் தேதி வரை இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இதனால் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் ஷூட்டிங் இல்லாததால் வீட்டிற்குள் கூடுவதுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவ்வப்போது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் நடிகர் யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் , விஜய் , ரஜினி மூவரும் சேர்ந்து கேரம் விளையாடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படமொன்றை வெளியிட்டு அதை நடிகர் படப்பிடித்தார் என கூறி பதிவிட்டுள்ளார். இது வெறும் கற்பனையே என்றாலும் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அருமையாகவும் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Captured by Kamal sir pic.twitter.com/SiFIrpKDna

— Yogi Babu (@yogibabu_offl) April 27, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்