வைரலாகும் அஜித்தின் புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படம்

வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:10 IST)
நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு விசுவாசம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே இயக்குகிறார். இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது. 
அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தில் அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம். மேலும் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல்,  இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இப்படத்திற்கான பூஜை நேற்று வியாழக்கிழமை மிகவும் சிம்பிளாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு அப்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அஜித்தின்  நியூ ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்