பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த ஜானரில் களமிறங்கும் அஜித்?

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:33 IST)
அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதைக்களமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால் பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்