வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘சபரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

வியாழன், 18 ஏப்ரல் 2024 (07:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளார். சிம்பு நடிப்பில் உருவான போடா போடி திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தாரை தப்பட்டை, சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகியவை அவர் நடித்ததில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களாக அமைந்தன. தமிழ் தாண்டியும் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் இப்போது நடித்து வரும் ‘சபரி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் அவரோடு கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலிம், பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனில் கட்ஸ் என்ற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மே 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்