எனக்கு அந்த வாசனை ரொம்ப பிடிக்கும்! ஸ்ருதி ஹாசனின் நாஸ்டால்ஜியா !

வெள்ளி, 1 மே 2020 (09:54 IST)
நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு புகையிலையின் வாசம் மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்குள் முடங்கியுள்ள பிரபலங்கள், சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் தொடர்பில் இருந்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தென் பாண்டி சீமையிலே பாடலை இசைத்துப் பாடி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளானார்.

இதையடுத்து இப்போது மீண்டும் சமூகவலைதளத்தில் ரசிகர்களோடு பேசிய அவர், தனக்கு புகையிலை வாசம் மிகவும் பிடிக்கும் எனவும், ஆனால் புகைக்க அல்லாமல் வெறுமனே முகர்ந்து பார்க்க மட்டுமே பிடிக்க என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள்,  ரப்பர் மற்றும் வெண்ணிலா ஆகிய பொருட்களின் வாசனையும் தனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்