மையோசிட்டீஸுக்காக எடுத்துக்கொண்ட ஸ்டீராய்ட்களால் வந்த பிரச்ச்னை- சமந்தா சொன்ன தகவல்!

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:51 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த சமந்தா கடந்த ஆண்டு மையோசிட்டீஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறி குணமானார். இந்நிலையில் தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

வேறு படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளாமல் சமந்தா ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று மையோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களோடு பேசிய அவர் “மையோசிட்டீஸ் பிரச்சனைக்காக அதிக ஸ்டீராய்ட்கள் எடுத்துக்கொண்டதால் என் சருமத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் நான் இப்போது பில்ட்டர் பயன்படுத்திதான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்