தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாய் தன்ஷிகா. இவர் நடிப்பில் வெளியான பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சாய் தன்ஷிகா. தன்னுடைய முதல் படத்தில் துணிச்சலான கல்லூரி மாணவியாக வலம் வந்தார். பிறகு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையால் தனி அடையாளத்தை பதித்து வருகிறார்.