எப்பதான் உங்களுக்கு வயசு ஆகுமோ தெரியலயே... குஷ்புவை கண்டு உருகும் ரசிகர்கள்!

புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:50 IST)
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறித்து கருத்து தெரிவிப்பார். எப்போதும் ட்விட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு தற்ப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒர்க் செய்து பாதி உடம்பாகி ஸ்லிம் பியூட்டியாக தோற்றமளிப்பதை பார்த்த ரசிகர்கள் "எப்பதான் உங்களுக்கு வயசு ஆகுமோ தெரியலயே?.சிங்கார வேலன் குஷ்பு திரும்பி வந்தாச்சு..என அழகை வர்ணித்து வருகின்றனர்.

#happiness when your old dresses fit you once again.. #workoutresults #positivity #goodhealth #staysafe pic.twitter.com/btZLlFZm1t

— KhushbuSundar ❤️ (@khushsundar) August 18, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்