கூகுள் மேப் செய்த தவறால்...வழிதவறிச் சென்ற நடிகர் அஜித்...

வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:20 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார்.இவர் கார் ரேஸ், பைக்ரேஸ், புகைப்படம், ட்ரோன் தயாரித்தல்,. துப்பாக்கி சுடும் பயிற்சி போன்றவற்றி ஆர்வமுடன் ஈடுபட்டு பன்முகக் கலைஞராக அறியப்படுகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் அஜித்குமார் சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் இன்று எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள ரைபில் கிளப்பிற்குப் பயிற்சிக்காகச் சென்றபோது, அவரைப் பார்த்த போலீஸார் முதல் மக்கள் வரை அனைவரும் அவருடன் நின்ரு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,.

மேலும் அஜித்தை பார்க்க மக்கள் கூட்டம் அதிகரித்துவிட்டதால், அஜித்திற்கு பாதுகாப்புக் கொடுப்பதில் போலீஸார் சற்றுத் திணறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இணையதளத்தில் நடிகர் அஜித் அங்கு வழிமாறி வந்ததற்குக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

எப்போதும் தனது சொந்தக் காரில் செல்லும் நடிகர் அஜித், இன்று கால் டாக்ஸி காரை புக் செய்து வந்துள்ளார். அப்போது கமிஷார் அலுவலகம் செல்ல வேண்டுமென அஜித் கூறியதாகத் தெரிகிறது. டிரைலர் கூகுள் மேப்பின்படி செல்ல பழைய கமிஷனர் அலுவலத்திற்குச் செல்வதற்குப்பதிலாக புதிய கமிஷனர்  அலுவலகம் சென்றுள்ளது அதுதான் குழப்பத்திற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்