மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்! சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழு!

சனி, 30 ஜனவரி 2021 (17:18 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை வியாபாரம் செய்வதற்காக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். கௌரவ தோற்றம் என்று சொன்னாலும் அவர் இடம்பெறும் காட்சிகள் 30 நிமிடம் வரை வரும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்