தவானுடன் களமிறங்க போகும் தொடக்க ஆட்டக்காரர்- மயங்க் அகர்வாலா? சுப்மன் ஹில்லா?

திங்கள், 23 நவம்பர் 2020 (11:01 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யாரை தொடக்க ஆட்டக்காரராக இறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பியுள்ளார்.

ஆனால் முதலில் நடக்கும் ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் அவர் விளையாடுகிறார். இந்நிலையில் காயம் காரணமாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் விளையாடாத ரோஹித் ஷர்மாவுக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போவது மயங்க் அகர்வாலா அல்லது ஷுப்மன் கில்லா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக விளையாடுவதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்