பகல் - இரவு டெஸ்டில் சதம் அடித்தார் விராட் கோலி !!!

சனி, 23 நவம்பர் 2019 (14:37 IST)
இந்தியா மற்றும் வஙக்தேச அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்தியா விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் இந்த போட்டியை காண பல விஐபிக்கள் வருகை தந்துள்ளர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களையும் ஷமி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தொடங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவின்போது 46 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்நிலையில், இன்றைய  இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலி  அபாரமாக விளையாடி போட்டியில் சதம் அடித்தார்(163 பந்துகளுக்கு 103 ரன்கள்). இது அவரது 27 வது சதமாகும். மேலும், பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் கோலி படைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்