அகமதாபாத் பகலிரவு டெஸ்ட் போட்டி… விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!

புதன், 17 பிப்ரவரி 2021 (10:32 IST)
அகமதாபாத்தில் வரும் 24 ஆம் தேதி நடக்க உள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப் பட உள்ளன.

சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 5 டி 20 போட்டிகளும் அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மோட்டீரா மைதானத்தில் நடக்க உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியைக் காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

அதற்கான டிக்கெட்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்