சன் ரைசர்ஸ் அணிக்கு தெலங்கானா எம் எல் ஏ அறிவுரை!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:36 IST)
சன்ரைசர்ஸ் அணியில் உள்மாநில வீரர்களை எடுங்கள் அல்லது பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார் அமைச்சர் ஒருவர்.

ஐபிஎல் தொடரில் ஆரம்பம் விளையாடும் அணிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஒன்று. இந்த அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த அணியை தமிழ்நாட்டைச் சேர்ந்த சன் நிறுவனத்தின் தலைவர்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது அந்த அணிக்கு தெலுங்கானா மாநில ராஷ்டிரா ஜமதி எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்  ’அணியில் உள்ளூர் வீரர்களை எடுங்கள் அல்லது அணியின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். மாநிலத்தின் திறமையான் வீரர்களுக்கு அணியில் இடமில்லை. ஏலத்திலும் அவர்கள் தவிர்க்கபடுகிறார்கள். இப்படியே போனால் நாங்கள் போட்டியை நடத்த விடமாட்டோம்’ என எச்சரிக்கும் விதமாகக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்