கிரிக்கெட் சங்கத்தில் மிகப்பெரிய ஊழல் – தென் ஆப்பிரிக்காவுக்கு தடையா?

திங்கள், 19 அக்டோபர் 2020 (10:17 IST)
கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்கள் நடந்திருப்பது அம்பலமாகியிருப்பதை அடுத்து அந்த அணிக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் தடை விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்கள் நடந்திருப்பதால் அந்நாட்டு அரசு வாரியத்தில் தலையிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக முன்னாள் நிர்வாகி மோரே பதவிக் காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக 500 பக்க அறிக்கை அந்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றுள்ளது. இதில் சில பக்கங்கள் இணையத்திலும் வெளியாகியுள்ளன.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாகியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் தடைவிதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்