என்னை தோனியோடு ஒப்பிடாதீர்கள்… ரிஷப் பண்ட் விளக்கம்!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:24 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தன்னை தோனியோடு ஒப்பிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர். மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் பண்ட்.

டெஸ்ட் போட்டியில் மிகவிரைவாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்பதில் தோனியை முறியடித்துள்ளார் பண்ட். இதனால் தோனியோடு ஒப்பிட்டு ரிஷப் பண்ட் பேசப்பட்டு வரும் நிலையில் ‘என்னை யாருடனும் ஒப்பிடாதீர்கள், இந்திய கிரிக்கெட்டில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய தனித்தன்மையோடு விளையாட விரும்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்