சுரேஷ் ரெய்னா கோரிக்கையை ஏற்ற முதல்வர்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

புதன், 2 செப்டம்பர் 2020 (08:08 IST)
சுரேஷ் ரெய்னா கோரிக்கையை ஏற்ற முதல்வர்
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னாவின் வீட்டில் சமீபத்தில் திடீரென மர்ம நபர்கள் தாக்கியதில் அவருடைய மாமா சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன் பின் அவருடைய அத்தை மகன் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த சம்பவத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து இந்தியா வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பஞ்சாப் முதல்வருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார் 
 
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் தனது டுவிட்டரில் பதிவு செய்த பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர்சிங், உங்களுடைய கோரிக்கை ஏற்கப்படும் என்றும், உங்கள் உறவினர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கூறியுள்ளார் 
 
மேலும் பாதிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் குடும்ப உறுப்பினர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து தங்களது வருத்தத்தை தெரிவித்ததோடு விரைவில் குற்றவாளியை பிடிப்போம் என்று உறுதி கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று பஞ்சாப் முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்