நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது . பராக் மட்டுமே ஓரளவு நிலைத்து விளையாடி 48 ரன்கள் எடுத்தார்.