நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம்: இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்

திங்கள், 20 நவம்பர் 2023 (07:42 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் ஆறுதல் கூறியுள்ளார்.

நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பௌலிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் அசத்தி கோப்பையை கைப்பற்றியது

கோடிக்கணக்கான இந்தியர்களின்  மனம் வருத்தமடைந்த நிலையில், விளையாடிய அனைத்து வீரர்களும் மைதானத்தில் மிகவும் சோகமாக இருந்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தோல்வி அடைந்த இந்திய அணிக்கு தனது ஆறுதலை கூறியுள்ளார்.

நீங்கள் சிறப்பாக விளையாடி, நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்போம் என்று கூறியுள்ளார்.  இதனை அடுத்து ரசிகர்களும் இந்தியா கேப்டனுக்கும் இந்திய அணிக்கும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்